தமிழகத்தில் இன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்பட 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ரவுண்டு வடகிழக்கு பருவமழை சூடுபிடித்துள்ளது. நேற்று தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இன்று காலையில் இருந்தே தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி வருகிறது.

தூத்துக்குடி, குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் காலையில் இருந்தே ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல் சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.

இன்று கனமழை பெய்யும் மாவட்டங்கள்

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று (08-11-2025) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை எங்கு கனமழை கொட்டும்

நாளை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

10 ஆம் தேதி, தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 11.11.2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 12 ஆம் தேதி கனமழை ஆரம்பம் 12.11.2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் சுனமழை பெய்யவாய்ப்புள்ளது.

13.11.2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

14.11.2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் மழை பெய்யும் சென்னையில் இன்று (08-11-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ட் வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெட நிலை 25-,6 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னையில் நாளை (09-11-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலை 34 செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26* செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

மழை அளவு (செமீ)

 ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 10, வெம்பாக்கம் (திருவண்ணாமலை) 8. * ஆவடி (திருவள்ளூர்), கலவை AWS (ராணிப்பேட்டை), மண்டலம் 01 விம்கோ நகர் (சென்னை). மண்டலம் 01 எண்ணூர் (சென்னை), செங்குன்றம் (திருவள்ளூர்) தலா 7, * மண்டலம் 02 மணலி (W 17) (சென்னை), வாலாஜா (ராணிப்பேட்டை) தலா 6 செமீ, * வாணியம்பாடி (திருப்பத்தூர்), மண்டலம் 02 மணலி புதுநகரம் (சென்னை). கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), அம்பத்தூர் (Rev) (திருவள்ளூர்) தலா 5 செமீ. * மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை), மண்டலம் 07 அயப்பாக்கம் (சென்னை). ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), திருப்பத்தூர் AWS (திருப்பத்தூர்), திருப்பத்தூர் (திருப்பத்தூர்). ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), புழல் ARG (திருவள்ளூர்), ஆனைமடுவு அணை (சேலம்), அரூர் (தர்மபுரி), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை) தலா 4 செமீ மழை பெய்துள்ளது.