இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று, எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக வாக்குகளுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது உயரிய அரசியலமைப்பு பதவியான துணை ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் இன்று மாலை வெளியாகின.
எதிர்க்கட்சி வேட்பாளர், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார். இந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் 767. இதில் 15 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி மற்றும் ராஜ்யசபா பொதுச்செயலாளர் பி.சி. மோடி தெரிவித்தார்.

பாஜக கூட்டணிக்கு எதிர்பார்த்ததை விட அதிக வாக்குகள்! இந்தியா கூட்டணிக்கு ஷாக் துணை ஜனாதிபதி தேர்தல் பெரும்பான்மை பெறுவதற்கு 377 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளும், ரெட்டி 300 வாக்குகளும் பெற்றதாக மோடி அறிவித்தார். மக்களவை மற்றும் ராஜ்யசபாவின் தற்போதைய பலத்தின் அடிப்படையில், தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்களிடமிருந்து ராதாகிருஷ்ணன் குறைந்தபட்சம் 427 வாக்குகள் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 11 எம்.பி.க்கள் ஆதரவுடன், அவருக்கு 438 வாக்குகள் கிடைத்திருக்கும். சுயேச்சை மற்றும் பிற நடுநிலையான எம்.பி.க்களின் வாக்குகளையும் சேர்த்தால் 449 வாக்குகள் கிடைத்திருக்கும். சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் அதே சமயம், இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றதால், ரெட்டிக்கு 315 வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதி முடிவுகளில் ராதாகிருஷ்ணன் எதிர்பார்த்ததை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளார். ரெட்டி எதிர்பார்த்த எண்ணிக்கையை விட குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளார்
செல்லாத 15 வாக்குகள் எதிர்க்கட்சியில் இருந்து வந்திருந்தாலும், சி.பி.ராதாகிருஷ்ணன் எதிர்பார்த்ததை விட சில வாக்குகள் அதிகம் பெற்றிருப்பது, எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைக் காட்டுகிறது. முக்கியமாக இந்தியா கூட்டணியில் சில கருப்பு ஆடுகள் இருப்பதை உறுதி செய்கின்றன. அதாவது இந்தியா கூட்டணிக்குள் பாஜகவிற்கு ஆதரவாக சிலர் இருப்பதை உறுதி செய்கிறது.
பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றததையடுத்து வரும் 12 ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பி.ஜே.டி மற்றும் பி.ஆர்.எஸ் போன்ற கட்சிகள் (மொத்தம் 11 வாக்குகள்) தேர்தலில் இருந்து விலகியிருந்தன. இந்தியா கூட்டணிக்கு கடந்த குடியரசு துணை தலைவர் தேர்தலை விட அதிக வாக்குகள் கிடைத்துள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். கடந்த 2022- ஆம் ஆண்டில் எதிர்க்கட்சி வேட்பாளர் 26 சதவீதம் வாக்குகளை பெற்றார். இம்முறை 40 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
2022 துணை ஜனாதிபதி தேர்தலிலும், குறிப்பாக ஐக்கிய எதிர்க்கட்சிக்குள் பல குறுக்கு வாக்குப் பதிவுகள் இருந்தன. தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜகதீப் தன்கர் 528 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இது 30 ஆண்டுகளுக்கும் மேலான உச்சபட்ச வெற்றியாகும். அவர் மார்கரெட் ஆல்வாவை தோற்கடித்தார்.
துணை ஜனாதிபதி தேர்தல்களில் ரகசிய வாக்கெடுப்பு நடைபெறும். கட்சித் தலைவர்களின் கட்டளைகளுக்கு எம்.பி.க்கள் கட்டுப்பட்டவர்கள். இருப்பினும், இத்தகைய வாக்குப் பதிவுகள் வாயிலாக எதிர்க்கட்சிகளுக்குள் உள்ள பிளவுகளை அறிய முடிகின்றது.
கட்சியின் கொள்கைகளை மீறி எதிர்கட்சிக்கு வாக்களித்தவர்கள் துரோகிகள் தான்!