சங்கரன்கோவில் நகராட்சி நகர்மன்ற தலைவிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நகர்மன்ற உறுப்பினர்கள் 24பேர் மனு கொடுத்ததின் பேரில் வாக்கெடுப்பு நடத்த உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் என ஆணையாளர் நோட்டிஸ் அனுப்பியதால் பரபரப்பு….

சங்கரன்கோயில் நகர்மன்ற உறுப்பினர்கள்

சங்கரன்கோவில் நகராட்சி திமுக நகர்மன்ற தலைவி உமாமகேஸ்வரி பொதுமக்கள் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பலமுறை நகர்மன்ற உறுப்பினர்கள் மனுவாகவும், நேரிலும் கூறி நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த நகர்மன்ற உறுப்பினர்கள் நகர்மன்ற தலைவி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என அதிமுக நகர்மன்ற உறுப்பினர் கண்ணன் தலைமையில் 24நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர்..

இதனைதொடர்ந்து இன்று நகர்மன்ற உறுப்பினர்கள் அளித்த மனுவின் அடிப்படையில் நகர்மன்ற தலைவி உமாமகேஸ்வரி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் வாக்கெடுப்பு நடத்த 2-7-2025 அன்று நகராட்சி சட்ட விதிகளின் படி நடைபெறும் என மொத்தமுள்ள 30 நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் நகராட்சி ஆணையாளர் நாகராஜ் நோட்டிஸ் (அழைப்பானை) வழங்கிய சம்பவம் திமுகவினர் மற்றும் நகராட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

ஆணையாளர் அனுப்பிய நோட்டீஸ்

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினராக ராஜா பதவியில் இருந்தும் திமுக நகர்மன்ற தலைவி மீது திமுக நகர்மன்ற உறுப்பினர்களே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது அனைத்து அரசியல் கட்சியினர் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது. எனவே சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் திமுகவில் உட்கட்சி பூசலை ஏற்படுத்தி வரும் சட்டமன்ற உறுப்பினர் ராஜா மீது திமுக தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது திமுக முக்கிய நிர்வாகிகளின் கோரிக்கையாகும்….

இதில் குறிப்பாக சங்கரன்கோவில் திமுக நகர செயலாளரின் மனைவியும் நகர்மன்ற உறுப்பினராக இருக்க கூடியவரும் சேர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு மனு அளித்துள்ளது குறிப்பிடதக்கது,…