திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் ஜோத்தம்பட்டி ஊராட்சியில் முறையாக குப்பைகள் அகற்றுவதில்லை. சுத்தமும் சுகாதாரமும் கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக ஜோதிநகர் நுழைவாயில் பகுதியில் அமராவதி சர்க்கரை ஆலைக்கு சொந்தமான இடத்தில் ஓம் முருகா திருமண மண்டப நிர்வாகத்தினர் இங்கு தொடர்ச்சியாக குப்பை கொட்டிவருகிறார்கள். இதை ஊராட்சி நிர்வாகம் தடுப்பதில்லை. குப்பை/கழிவுநீர் மேலாண்மையில் ஜோத்தம்பட்டி ஊராட்சி நிர்வாகம் மிகவும் பின்தங்கியுள்ளது. நிர்வாகத்திற்கு போதிய விழிப்புணர்வு இல்லை.
இவைகளை மேற்கோள்காட்டி, முதல்வர் தனிப்பிரிவிற்கு புகார் அளிக்கப்பட்டது. ஆனால், மடத்துக்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஊ) மேற்கண்ட இடத்தில் குப்பைகளை அகற்றாமலே அகற்றிவிட்டதாக எனக்கு பொய்யாக கடிதம் அனுப்பினர். இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை மேற்கொள்ள திருப்பூர் மாவட்ட திட்ட இயக்குனருக்கு தொலைபேசியில் புகார் அளிக்கப்பட்டதால் தற்போது மேற்கண்ட இடங்களை சுத்தம் செய்து வருகின்றனர். மேலும், இதே சாலையில் தனிநபர் ஒருவர் தனது வீட்டின் கழிவு நீரை சாலையில் விடுகின்றனர். இதனால் அந்தபகுதிகளில் கடுமையான சுகாதாரக்கேடு ஏற்படுகின்றது. இருசக்கர வாகனங்களில் வருவோர்களுக்கு விபத்தில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. இதனையும் உடனடியாக சீர்செய்யவேண்டும். இல்லையெனில் மீண்டும் புகார் அளிக்கப்படும்.
அமராவதி சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் குப்பை கொட்டக்கூடாது என அறிவிப்பு பலகை அமைத்து எச்சரிக்கை செய்யவேண்டும். இதுதொடர்பாகவும் புகார் அனுப்பப்பட உள்ளது.
எனது புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட திட்ட இயக்குனருக்கு நன்றி!