2026 சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த JRK என அழைக்கப்படும் இரா.ஜெயராமகிருஷ்ணனின் இமேஜ் திமுகவில் ஜெட் வேகத்தில் கூடிக்கொண்டே போகின்றது.

கடந்த நவம்பர் மாதம் தனது மகளின் திருமணத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையிலும், உடுமலை அருகே மிகப்பெரிய மாநாடு போல “ஜாம் ஜாம்” என திருமண வரவேற்பு விழா நடத்தியதைக் கண்டு பொதுமக்கள் வியந்து மகிழ்ந்து போனார்கள். கட்சிதான் முக்கியம் என்றால் அவர் சென்னையிலே திருமணத்தை நடத்தியிருப்பார். இருப்பினும் பொதுமக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உடுமலையிலும் விழா ஏற்பாடு செய்து அனைத்து தரப்பு மக்களையும் அழைத்து அவர்களுக்கு விருந்தளித்தது வரவேற்கத்தக்கது.

கடந்த பிப் 02 ம் தேதி இரா.ஜெயராமகிருஷ்ணனின் திருமண நாளை முன்னிட்டு நண்பர்கள், முக்கியஸ்தர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் தெரிவித்ததோடு நேரடியாக அவரின் இல்லத்திற்கே சென்று கேக் வெட்டி கொண்டாடினர். அந்த சூடு அடங்குவதற்குள் பிப்-08 ம் தேதி இரா.ஜெயராமகிருஷ்ணனின் பிறந்தநாள் வர, கட்சிக்காரர்கள் சமூகவலைத்தளங்களில் வாழ்த்து மழையை பொழிய ஆரம்பித்தனர். பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி நேரில் சந்தித்து JRK-க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அதோடு, கட்சியின் முன்னோடிகளும், முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் இல்லத்திற்கு சென்று வாழ்த்துக்களை தெரிவிக்க சாரை சாரையாக அணிவகுத்தனர். வருவோர்களில் அதிகமானோர் கேக்குகளை வெட்டி கொண்டாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே ஏழை மக்களுக்கு அன்னதானமும், காந்தி உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்களுக்கு உணவு, எழுதுப்பொருட்களும், கோமங்கலத்தில் உள்ள மூத்தோர் இல்லத்தில் பெரியவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் இரா.ஜெயராமகிருஷ்ணனின் மகளின் கணவர் மருத்துவர் எஸ்.சூர்யா கலந்து கொண்டார். கடந்த இரண்டு நாட்களாக JRK-வின் பிறந்தநாளுக்காக பதிவிடப்பட்ட வாழ்த்து செய்திகள் சமூகவலைத்தளங்களில் டிரெண்ட் செய்யப்பட்டது.

திமுகவைச் சேர்ந்த கழக முன்னோடி ஒருவரிடம் பேசினோம்.. JRK கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் சிரத்தையுடன் கட்சிப்பணியாற்றி வருகின்றார். உள்ளாட்சி பொறுப்பில் தொடங்கி சட்டமன்ற உறுப்பினர் வரை வளர்ந்துள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அவரின் இனிமையான அணுகுமுறைதான். எவரிடமும் கடிந்துகொள்ள மாட்டார். கட்சிக்காரர்களுக்கு தன்னால் இயன்றளவு வேண்டிய உதவிகளைச் செய்வார். கட்சியில் நீண்டகாலம் உழைத்தவர்களுக்கும், சாதாரணமானவர்களுக்கும் கட்சிப் பொறுப்பை வழங்கி அங்கீகாரம் அளித்தார். இவற்றையெல்லாம் மறக்காததால்தான் அவரின் பிறந்தநாளை இந்தளவிற்கு கட்சிக்காரர்கள் கொண்டாடுகின்றனர் என்றார்.
“உழுந்தாரின் வினை எல்லாம் உணர்வு
பிறப்பான்நல்லருள் பரப்பி நெறி.”