மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்றும் இன்றும் தொடர்ச்சியாக மழை பெய்ததால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று டிச-13 விடுமுறை அளிக்கப்பட்டது. அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, உடுமலை வட்டத்திற்கு உட்பட்ட அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

எம்எல்ஏ மகேந்திரன் ஆய்வு மேற்கொண்டர்.

மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் நேரில் சென்று அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அணையின் நீர் வரத்து குறித்தும், நீர் வெளியேற்றம் குறித்தும் கேட்டறிந்தார். அதோடு, ஆற்றங் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.