திருப்பூர் புறநகர் அதிமுக கிழக்கு மாவட்ட கழக செயலாளராக மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் பொறுப்பேற்றதிலிருந்து திறம்பட பணியாற்றுகிறார். கட்சியை பலப்படுத்தவும், புதியவர்களை கட்சியில் இணைக்கும் பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றார். அதோடு, தொகுதி மக்களிடம் நற்பெயரையும், இளைஞர்களிடம் செல்வாக்கையும் பெற்றவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சி.மகேந்திரன் எம்எல்ஏ

திருப்பூர் புறநகர் அதிமுக கிழக்கு மாவட்டத்தில் மடத்துக்குளம், தாராபுரம் என இரண்டு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த இரண்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சிகளின் சார்பு அணிகளின் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு இன்று (நவ-23) பொறுப்புகள் வழங்கப்பட்டது.

அணிவகுத்த வாகனங்கள்

உடுமலை-பழநி சாலை, சி.எம். டவர் வளாகத்தில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் தங்கள் ஆதரவாளர்களுடனும், சிலர் மேள தாளத்துடனும் கார்களில் அணிவகுத்து அமர்க்களப்படுத்தினார்கள். சுமார் 100க்கும் மேற்பட்ட கார்களின் வருகையினால் சிறிது நேரம் தேசிய நெடுஞ்சாலையே ஸ்தம்பித்தது. மாவட்ட செயலாளர் சி.மகேந்திரனை வரவேற்கும் விதமாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டது.

சி.மகேந்திரன் எம்எல்ஏவை வரவேற்ற கட்சியினர்

புதிய நிர்வாகிகள் சால்வை அணிவித்தும், பூங்கொத்துக்கள் கொடுத்தும் புகைப்படம் எடுத்துக்கொண்டு நன்றி தெரிவித்தனர். சி.மகேந்திரன் எம்எல்ஏவும் புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களைக் கூறினார். மேலும், சி.மகேந்திரன் எம்எல்ஏ பேசும்போது.. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நி்ாவாகிகள் அனைவரும் கழகத்தினருடன் இணைந்து விருப்பு வெறுப்புக்களைப் புறந்தள்ளி ஒற்றுமையாக செயல்பட வேண்டும். கழக வளர்ச்சிக்கு அயராது பாடுபட வேண்டும். அதிமுக ஆட்சிக்காலத்தில் நாம் செய்த சாதனைகளைப் பட்டிதொட்டியெங்கும் பரவச்செய்ய வேண்டும். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவே வெல்லும். அண்ணன் எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக அரியணையில் அமரவைப்போம் என இந்நாளில் நாம் அனைவரும் சூளுரைப்போம் என உணர்ச்சி பொங்கப் பேசினார்.

மாவட்ட அலுவலகம் வந்திருந்த கட்சியினர்

திருப்பூர் புறநகர் அதிமுக கிழக்கு மாவட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் தேர்வின் பலன் வரும் உள்ளாட்சி தேர்தலிலும், 2026 சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்கிறர்கள்…