கோயம்புத்தூரில் அடுத்தடுத்து பல ஐடி பார்க்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. நகரம் முழுவதும் உள்ள IT பூங்காக்கள் அடுத்தடுத்து கட்டப்பட்டு வருகின்றன. பெங்களூர், ஹைதராபாத்திற்கு போட்டியாக இங்கே பல ஐடி பார்க்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பொள்ளாச்சி சாலையில் 7,00,000 சதுர அடியில் ஐடி பார்க் அமைக்கப்படும் என சமீபத்தில் TANNY Shelters அறிவித்தது. கோயம்புத்தூரின் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சியை மேலும் தீவிரமாக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கோயம்புத்தூர் பொள்ளாச்சி சாலை இதன் மூலம் முக்கிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்களுடன் தொழில்நுட்ப மையமாக வளர்ந்து வருகிறது. ஏற்கனவே ரத்தினம் & எல்&டி டெக் பூங்கா இங்கே பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இப்போது புதிதாக அமைய உள்ள டேனியின் புதிய 7 லட்சம் சதுர அடி ஐடி பூங்கா கவனம் பெற்றுள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஐடி சேவைகளுக்கான பிரதான இடமாக கோவை மாறி வருகிறது. கோவை ஐடி பார்க்: கோயம்புத்தூரை நோக்கி முதலீடுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. முக்கியமாக சென்னையில் தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கப்படும் நிலையில் இன்னொரு பக்கம்.. ஐடி நிறுவனங்கள் கோவையை நோக்கி செல்ல தொடங்கி உள்ளன. மற்ற நகரங்களில் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கான முதலீடுகள் மேற்கொள்ளப்படும் நிலையில்தான் கோவையில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைப்பதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
கோவை கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாட்டின் ஐடி தலைநகர் ஆகி வருகிறது. SKIP நல்ல கிளைமேட், நல்ல தண்ணீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருப்பதால் கோவை கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாட்டின் ஐடி தலைநகர் ஆகி வருகிறது. அந்த வகையில் கோவையில் மேற்கொள்ளப்படும் ஐடி முதலீடுகள் தொடர்பான முக்கியமான 3 அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகின. பெங்களூர், ஹைதராபாத்திற்கு போட்டியாக இங்கே பல ஐடி பார்க்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி ஆம்பர் குழுமம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் நிறுவனம் கோவையில் புதிய அலுவலகத்தை விரைவில் திறக்கவுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் அங்கே நடக்க உள்ளது. 15 மாடி கட்டிடமாக அங்கே இந்த கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. மேலும் கோயம்புத்தூரில் உள்ள Wynfra சைபர்சிட்டி அமைக்கப்பட உள்ளது. ~1.92 மில்லியன் சதுர அடி கொண்ட ஐடி பார்க் இதன் மூலம் அங்கே அமைக்கப்படும். நகரின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப திட்டங்களில் ஒன்றாக இது அமையும். தற்போது கோவையில் இருக்கும் ஐடி பார்க்குகளை விட பெரிதாக.. மிகப்பெரிய அளவில் இந்த ஐடி பார்க் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பிரம்மாண்ட வரைபடம் வெளியிடப்பட்டு உள்ளது. கோவையின் மிகப்பெரிய ஐடி பார்க்காக மட்டுமன்றி.. அதிக சர்வீசுகளை மேற்கொள்ளும் ஐடி பார்க்காக இது உருவெடுக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. ” டிரைவர்களுடன் வருபவர்களுக்கு மட்டுமே சரக்கு.. ஏற்கனவே கோவையில் இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்பட்டு வருகிறது. கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. தனியார் மூலம் பீனிக்ஸ் மால் அமைக்கப்பட்டு வருகிறது. இப்படி கோவையில் பல்வேறு மாற்றங்கள் நடக்கும் நிலையில் கோவை விரைவில் ஹைதராபாத், பெங்களூரை முந்தினால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.