திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை – பழநி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலப்பம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் அமர்வதற்காக சாய்வு நாற்காலி உள்ளது. இதில் நான்கு பேர் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. உடுமலையிலிருந்து பழநிக்கு சென்று கொண்டிருந்த கேரள பதிவு எண் கொண்ட வேகன் ஆர் வாகனம், பாலப்பம்பட்டி பிரிவிற்கு முன்பாக உள்ள ஸ்பீடு பிரோக்கரில் ஏறி கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து நிறுத்த சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தவர்கள் மீது வேகமாக வந்து மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இந்த வாகனத்தில் கேரளாவில் இருந்து குடும்பத்துடன் வந்திருப்பாதாக தெரிகிறது. கார் தலைகுப்புற கவிழ்ந்துள்ளது. இதையடுத்து, பாலப்பம்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் பாலப்பம்பட்டி பிரிவு அருகே சாலை மறியலில் ஈடுபட்டு, வேகத்தடையை இன்னும் பெரிதாக அமைக்க வேண்டும் எனவும், டிவைடர் வைக்க வேண்டும் எனவும், மாலை பள்ளி முடியும் நேரத்தில் காவலர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்த விபத்தில் இறந்தவர்களில் ஒருவர் பாலப்பம்பட்டியை சேர்ந்தவர் என்பதும் பஞ்சு தொழில் செய்கிறார் என தெரியவந்துள்ளது. மற்றவர்கள் குறித்தும் விபத்து ஏற்படுத்தியவர் குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.