சங்கரன்கோவில் சங்கரநாராயண்சாமி திருக்கோவில் திருகுடமுழக்கு நன்னீராட்டு விழாவினை காண பல்லாயிரகணக்கான பக்தர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் பொறுமையிழந்த பக்தர்கள் இரண்டு மாவட்ட எஸ்பியின் பாதுகாவலர்களை இடித்து தள்ளிவிட்டு சென்றதால் பரபரப்பு. ஒரு பக்தர் கூட்ட நெரிசலில் குப்புற விழுந்தார் பெண் காவலர் தூக்கி விட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாரயாணர் கோமதிஅம்பாள் திருக்கோவில் திருகுடமுழுக்கு நன்னீராட்டு விழாவானது சிறப்பாக நடைபெற்றது. இதில் திருக்கோவிலில் இருந்து திருகுடமுழுக்கு நிகழ்வை காண அனுமதி சீட்டு என்ற பெயரில் திருக்கோவில் ஆணையாளர் கையெப்பம் இட்ட பாஸ் அரசியல் பிரமுகர்கள் மற்றும் காவல்துறை, அரசுத்துறை மற்றும் திருக்கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் அவர்களுக்கு வேண்டியர்வர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.அதனால் காலையில் பக்தர்கள் அனைவரையும் காவல்துறையினர் கோவிலை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் தடுப்புகள் அமைத்து அனுமதி சீட்டு வைத்திருந்தவர்களை மட்டுமே உள்ளே அனுமதித்தனர். அதனால் பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.

சமூகவலை தளங்களில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

பின்னர் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த பல்லாயிரகணக்கான பக்தர்கள் பொறுமையிழந்து இரண்டு மாவட்ட எஸ்பியின் பாதுகாவலர்களையும் இடித்து தள்ளிவிட்டு திருக்கோவில் உள்ளே சென்றதால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. கூட்ட நெரிசலில் மூதாட்டி ஒருவர் கீழே விழுந்ததால் அவரை பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் தூக்கிவிட்டார்…கூட்ட நெரிசலில் நெல்லை தென்காசி எஸ்பியும் மாட்டி கொள்ளும் நிகழ்வும் நடைபெற்றதாக கூறப்படுகிறது…சங்கரநாரணர் சுவாமி திருகுடமுழுக்கு பக்தர்கள், பொதுமக்களுக்காக நடத்தப்பட்டதா இல்லை அரசியல் பிரமுகர்களுக்கும், அதிகாரம் படைத்தவர்களுக்கும் நடத்தப்பட்டத என்ற கேள்வியை பக்தர்கள் முன்வைத்துள்ளனர்..

எனவே அனுமதி சீட்டு வழங்கியவர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் வழி வகை செய்த திருக்கோவில் நிர்வாகத்தினர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்;வலர்கள் மற்றும் பக்தர்களின் கோரிக்கையாகும்…