சங்கரன்கோவில் அருகே உள்ள வாசுதேவநல்லூரில் இயங்கி வரும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் நாற்பது மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பயின்று வருகின்றனர். இவர்களின் நீண்ட கால ஆசை தியேட்டருக்கு சென்று படம் பார்க்க வேண்டும் என கூறி வந்துள்ளனர். இதனையறிந்த சமூக ஆர்வலரும் நாள்தோறும் நூற்றுகணக்கானோருக்கு அன்னதானம் மற்றும் பல ஏழை, எளிய குழந்தைகளுக்கு படிதப்பதற்கு உதவி செய்து வரும் வீரபுத்திரன் மனவளர்ச்சி குன்றிய நாற்பது குழந்தைகளை புளியங்குடியில் உள்ள தனியார் தியேட்டருக்கு அழைத்து சென்று “வாழை” படத்தை பார்க்க வைத்து அக்குழந்தைகளின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றினார்.
you might also like
தங்கம் விலை உச்சம் காரணம் என்ன? ஆட்டுவிக்கும் அமெரிக்கா- சீனா..
October 14, 2025
இருபது குழந்தைகளின் உயிரை குடித்த ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து..
October 10, 2025