ஹாய், யாஸ்மின் ரூஃபோவிடமிருந்து உங்களுக்கு வாய்ஸ் மெயில் (குரல் பதிவு) வந்திருக்கிறது. அதை கேட்க மாட்டேன் என்றோ அல்லது பின்னர் அழைக்கிறேன் என்றோ தயவுசெய்து மெசேஜ் அனுப்பாதீர்கள்.
துரதிருஷ்டவசமாக நான் அப்படி மெசேஜ் அனுப்பப் போவதில்லை. ஆனால், பெரும்பாலான ஜென் Z மற்றும் மில்லினியல் (Millennial) தலைமுறையினரை போன்று, நானும் அப்படி மெசேஜ் அனுப்ப விரும்புகிறேனா? நிச்சயமாக.(1980களின் முற்பகுதியில் துவங்கி 1990களின் பிற்பகுதி வரை பிறந்தவர்கள் மில்லினியல் என அழைக்கப்படுகின்றனர். இந்த தலைமுறையினருக்குப் பிறகு பிறந்தவர்களை Z தலைமுறையினர் என்று அழைக்கப்படுவர்.)18 முதல் 34 வயதுடையவர்களில் கால்பகுதி மக்கள், தங்களுக்கு வரும் போன் அழைப்புகளை ஏற்பதில்லை என, சமீபத்திய புள்ளிவிவரம் ஒன்று கூறுகிறது. போன் அழைப்புகளை தாங்கள் புறக்கணிப்பதாகவும், மெசேஜ் மூலம் பதில் அளிப்பதாகவும் தங்களுக்கு தெரிந்த எண்ணாக இல்லையென்றால் அதுகுறித்து இணையத்தில் தேடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முந்தைய தலைமுறையினருடன் முரண்
யுஸ்விட்ச் (Uswitch) நிறுவனம் 2,000 பேரிடம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில், 18-34 வயதுடைய 70% பேர், போன் அழைப்புக்கு மெசேஜ் மூலம் பதில் அனுப்புவதையே தாங்கள் விரும்புவதாக கூறியுள்ளனர்.முந்தைய தலைமுறையினருக்கு போனில் பேசுவது சாதாரணமான விஷயம். என்னுடைய பெற்றோர் தங்களின் பதின்பருவத்தில் தன்னுடைய உடன்பிறந்தோரிடம் வீட்டின் தாழ்வாரத்தில் தொலைபேசியில் சண்டையிட்டதை, அவர்களின் ஒட்டுமொத்த குடும்பமும் அப்போது கேட்டது. நான் 1990களின் பிற்பகுதியில் வேலை தொடர்பானவற்றுக்கு மட்டுமே தொலைபேசியை பயன்படுத்தினேன் அதற்கு முரணாக, என்னுடைய பதின்பருவம் மெசேஜ் அனுப்புவதிலேயே கழிந்தது. என்னுடைய 13-வது பிறந்தநாளில், இளஞ்சிவப்பு நிற ஃபிலிப் மாடல் நோக்கியாவை அன்பளிப்பாக பெற்றபோது, மெசேஜ் அனுப்புவதில் எனக்கு தீவிர ஆர்வம் ஏற்பட்டது. பள்ளி முடிந்து ஒவ்வொரு மாலையும் என் நண்பர்களுக்கு 160-எழுத்துகள் கொண்ட மெசேஜை அனுப்ப நேரம் செலவிடுவேன். தேவையில்லாத இடைவெளி, எழுத்துக்களை எல்லாம் நீக்கி, ஜி.சி.ஹெச்.க்யூ (அரசாங்க தகவல் தொடர்புகள் தலைமையகம்) கூட புரிந்துகொள்வதற்கு சிரமமாக இருக்கும் வகையில் அந்த மெசேஜ் குழப்பமானதாக இருக்கும்.
ஒரு மெசேஜுக்கு 10பி (10 பென்ஸ் பிரிட்டிஷ் நாணயம்) எனும்போது, 161 எழுத்துகளுக்கு மேல் அனுப்ப நான் நினைக்கவில்லை.2009-ல் மொபைலில் ஒருவரை அழைக்க செலவு மிகவும் அதிகமாகும்.“மாலை முழுதும் உன் நண்பர்களுடன் கிசுகிசுக்க இந்த போனை உனக்கு நாங்கள் தரவில்லை,” என, என்னுடைய மாதாந்திர போன் கட்டணத்தைப் பார்த்த பின்னர் என் பெற்றோர் எனக்கு நினைவூட்டுவர்.மெசேஜ்கள் மட்டுமே அனுப்பும் தலைமுறையினர் உருவாகினர். மொபைல் போன் அழைப்புகள் அவசரகாலத்திற்கு மட்டுமே என்றானது, தாத்தா-பாட்டிகளிடம் பேசுவதற்கு தொலைபேசியில் எப்போதாவது மட்டுமே அழைக்கப்பட்டது.2024-ல் கான்பரன்ஸ் அழைப்பு (கூட்டாக பலருக்கும் போன் செய்வது) தேவையில்லாதது என சராசரி பெண்கள் நிச்சயம் நினைத்திருப்பர்இளம்வயதினர் போனில் பேசும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளவில்லை என்பதால் அவர்கள் இவ்வாறு இருப்பதாக, டாக்டர் எலெனா டூரோனி தெரிவித்தார். “போனில் பேசுவது இப்போது வழக்கமில்லை என்பதால் அது வித்தியாசமாக தெரிகிறது” என்கிறார் அவர். இதனால் தங்களுடைய போன் ஒலிக்கும்போது (35 வயதுக்குட்பட்டோர் சத்தமான ரிங்டோனை வைத்துக்கொள்வதில்லை என்பதால், செல்போனில் லைட் எரியும்போது,) இளம் வயதினர், மோசமானது ஏதோ நடந்துவிட்டதாக அச்சப்படுகின்றனர்.
அழைப்புகளை ஏன் ஏற்பதில்லை?
யுஸ்விட்ச் கருத்துக்கணிப்பில் பேசிய பாதிக்கும் மேற்பட்ட இளம்வயதினர், எதிர்பாராத அழைப்புகள் மோசமான செய்தியாகத்தான் இருக்கக்கூடும் என தாங்கள் நினைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். மனநல தெரபி வழங்கிவரும் எலோய்ஸ் ஸ்கின்னர், செல்போன் அழைப்புகள் குறித்த பயம், “மோசமான ஏதோவொன்று குறித்த அச்ச உணர்விலிருந்து வருவதாக” தெரிவித்தார். “நம்முடைய பரபரப்பான வாழ்க்கை மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்படாத வேலைநேரம் காரணமாக, வெறுமனே பேசுவதற்காக போனில் அழைப்பதற்கு நமக்கு நேரம் இல்லை. முன்பெல்லாம், போன் அழைப்புகள் முக்கியமான செய்தியை கூறுவதற்கான ஒன்றாக இருந்தது, அவை பெரும்பாலும் சிக்கலானதாகவும் கடினமானதாகவும் இருக்கும்.”
“அதுதான் காரணம்,” என்கிறார் 26 வயதான ஜேக் லாங்லி. “மோசடியாளர்கள் அல்லது விற்பனையாளர்கள் யாராவது அழைப்பார்கள் என்பதால்,” தானும் தெரியாதவர்களின் அழைப்புகளை ஏற்பதில்லை என்கிறார் அவர்.“முறையான அழைப்புகள் எது என்பதை சல்லடை போட்டு தேடுவதற்கு பதிலாக, அந்த அழைப்புகளை ஏற்காமல் இருப்பது எளிதானது.”ஹார்ட்ஸ்டாப்பர் தொடரில் நிக் மற்றும் சார்லி இருவரும் மெசேஜ் செய்யும் தலைமுறையை சேர்ந்தவர்கள் போனில் பேசுவதில்லை என்பது, இளம் வயதினர் நண்பர்களுடன் தொடர்பில் இல்லை என அர்த்தமில்லை. சாதாரண மெசேஜ்கள், மீம்கள், வதந்திகள், கிசுகிசுக்கள் மற்றும் குரல் பதிவுகள் என, எங்களுடைய குரூப் சேட்-கள் நாள் முழுவதும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.இந்த உரையாடல்களில் பல இப்போது சமூக ஊடகங்களில் நடக்கின்றன, குறிப்பாக இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற சமூக ஊடகங்களில் மெசேஜ்களுடன் படங்கள், மீம்களை பகிர முடியும் என்பதால் அவற்றை பெரும்பாலும் விரும்புகின்றனர்.
வாய்ஸ் மெசேஜில் ஆர்வம்
போன் அழைப்புகள் வேண்டாம் என்பதை ஏற்றுக்கொள்ளும் இளம் வயதினர், வாய்ஸ் மெசேஜ் தொடர்பான கருத்தில் இருவேறு கருத்துகளை கொண்டுள்ளனர்.யுஸ்விட்ச் புள்ளிவிவரத்தில் 18-34 வயதுக்குட்பட்ட 37% பேர், வாய்ஸ் மெசேஜ் அனுப்புவதை தொடர்புக்கான தங்களின் விருப்ப தேர்வாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனுடன் ஒப்பிடுகையில், 35-54 வயதுக்குட்பட்டவர்களில் 1 சதவிகித பேர் மட்டுமே அழைப்புகளுக்கு பதிலாக வாய்ஸ் மெசேஜ் அனுப்புவதை தேர்ந்தெடுக்கின்றனர். வாய்ஸ் மெசேஜ் ஜென் z தலைமுறையில் ஒன்று உங்களுக்கு அதிகம் பிடிக்கலாம் அல்லது அதிக வெறுப்பை ஏற்படுத்தலாம்“வாய்ஸ் நோட் அனுப்புவது போனில் பேசுவது போன்றுதான், ஆனால் அதைவிட சிறப்பானது,” என்கிறார் 19 வயது மாணவர் சூசி ஜோன்ஸ். “உங்களுடைய நண்பரின் குரலை எந்தவித அழுத்தமும் இல்லாமல், இன்னும் தன்மையாக அவருடன் தொடர்புகொள்ள இதில் முடியும்”. ஆனால், தங்கள் வாழ்க்கை குறித்து நண்பர்கள் அனுப்பும் ஐந்து நிமிட வாய்ஸ் நோட்டை கேட்பது வலிமிகுந்தது, ஒவ்வொரு வார்த்தைக்கும் அடுத்து, “லைக்” (like) அல்லது “உம்” (uhm) போன்ற வார்த்தைகளே இருக்கும். அந்த ஒட்டுமொத்த செய்தியையும் இரண்டு மெசேஜ்களில் சொல்லிவிட முடியும். மெசேஜ்கள் மற்றும் வாய்ஸ் நோட்கள் இளம்வயதினரை தங்களுடைய வேகத்தில் இன்னும் சிந்தித்து, பதில்களை அனுப்ப அனுமதிக்கின்றன.
பணியிடங்களில் பிரச்னை
ஆனால், போன் அழைப்புகள் குறித்த பயம், உங்களின் பணி வாழ்க்கையை எந்தளவுக்கு பாதிக்கும்? வழக்கறிஞரும் கண்டென்ட் கிரியேட்டருமான 31 வயது ஹென்றி நெல்சன்-கேஸ்-யின் மில்லினியல்கள் குறித்த தொடர் வீடியோக்களுடன் வேதனையான விதத்தில் அதிகம் தொடர்புபடுத்திக்கொள்ள முடிகின்றன. அதில், வேலை தொடர்பாக பலருக்கும் மின்னஞ்சல் அனுப்புவதில் ஏற்படும் பதட்டம், அதிக நேரம் வேலை செய்வதை தன்மையுடன் மறுத்தல், போன் அழைப்பை தவிர்ப்பதற்கு எதையும் செய்யும் பணியாளர் ஆகியனவும் அடங்கும். “உடனடியாக அழைப்பை ஏற்க வேண்டும் என்ற அழுத்தம், உரையாடுவதில் ஏற்படும் பதட்டம், சங்கடம், பதில்கள் இல்லாமல் இருப்பது,” ஆகியவை போன் அழைப்புகளை வெறுக்க வைப்பதாக அவர் கூறுகிறார். “அதிகளவில் நம்மை வெளிப்படுத்திக் கொள்வதாகவும் அதிகளவு நெருக்கத்தை கோருவதாகவும் போன் அழைப்புகள் உள்ளன. மாறாக, மெசேஜ்கள் நம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமல் தொடர்புகொள்ள அனுமதிக்கும்,” என டாக்டர் டூரோனி விளக்குகிறார்.
க்ளூலஸ் திரைப்படத்தில் சேர் மற்றும் டியோன் இருவர் மட்டுமே போனில் கூலாக பேசிக்கொள்வர். வேலை நேரத்தில் அழைப்புகளை ஏற்பதை தான் தவிர்ப்பதாக கூறும் 27 வயதான வழக்கறிஞர் துஞ்சா ரெலிக், “அந்த அழைப்புகள் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும், உங்கள் பணிகளில் பின்னடைவை ஏற்படுத்தும்” என்கிறார். ‘இதை ஒரு மின்னஞ்சலாக அனுப்பியிருக்கலாம்’ என்பது போன்ற உணர்வு இது என்கிறார், ஸ்கின்னர்.“நேரம் குறித்த சிந்தனை அதிகரித்திருப்பதால், ஒருவர் போனில் அழைக்கும்போது மறுமுனையில் இருப்பவர் அந்நாளை நிறுத்திவிட்டு, அந்த உரையாடலில் கவனம் செலுத்த வேண்டும், இது பல வேலைகளை செய்ய வேண்டியுள்ளவர்களுக்கு கடினமாக இருக்கிறது.” என்கிறார் அவர்.
64 வயதான தொழிலதிபர் ஜேம்ஸ் ஹோல்டன், தன்னுடைய இளம்வயது பணியாளர்கள் அரிதாகவே போன் அழைப்புகளை ஏற்பதாக கூறுகிறார். “அதற்கு பதிலாக அவர்கள் தாங்கள் வேலையில் இருப்பதாக வழக்கமான மெசேஜ்களை அனுப்புவார்கள். அல்லது என்னுடைய அழைப்பை வேறு அழைப்புக்கு (call divert) மாற்றிவிடுவார்கள், அதனால் அவர்களை அழைக்கவே முடியாது”. “அவர்களிடம் தப்பிப்பதற்கான காரணங்கள் எப்போதும் இருக்கும். என்னுடைய செல்போன் சைலண்டில் இருந்ததால் பார்க்கவில்லை அல்லது பின்னர் அழைக்க மறந்துவிட்டேன் என கூறுவார்கள்.”
தொடர்புகொள்வதில் தெளிவான இடைவெளி இருப்பதாலும், பணியாளர்கள் மெசேஜ்கள் அனுப்புவதில் சௌகரியமாக இருந்தால் அவர்களுடைய விருப்பத்தை நாம் மதிக்க வேண்டும் என்பதாலும் அவற்றிற்கு தகவமைத்துக்கொள்ள நினைப்பதாக அவர் கூறினார். ஆனால், பேசாமல் இருப்பது மற்றும் வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கு விருப்பம் கொள்வதன் மூலம், திட்டமிடப்படாத மற்றும் அதிகாரபூர்வமற்ற உரையாடல்களை மேற்கொள்வதற்கான திறனை நாம் இழக்கிறோமா? இதே போக்கு தொடர்ந்தால், “நெருக்கம் அல்லது தொடர்பை நாம் இழந்துவிடுவோம்” என்கிறார் ஸ்கின்னர். “நாம் பேச்சின் மூலம் தொடர்புகொள்ளும்போது உணர்வுரீதியாகவும் தொழில் அல்லது தனிப்பட்ட ரீதியாகவும் அதிக ஒழுங்குடன் இருக்கிறோம்” என்கிறார் அவர். “இந்த இணைப்பு, குறிப்பாக பணியிடங்களில் அதிக நிறைவை தரும்.”
25 வயதான பல்பொருள் அங்காடியின் பகுதி மேலாளரான சியாரா பிராடி, “பணியில் என்னுடைய மூத்த அதிகாரிகள் என்னை போனில் அழைத்தால் அது எனக்குப் பிடிக்கும், அதை நான் ஊக்குவிக்கிறேன்” என்கிறார்.’நெவர் ஹேவ் ஐ எவர்’ எனும் நெட்ஃபிளிக்ஸ் தொடரில் தேவி எனும் பெண் தான் விரும்பும் ஆணிடம் போனில் காதலை வெளிப்படுத்தாமலேயே இருப்பார் “அது மிகவும் சிந்திக்கும் விதத்தில் இருக்கும். ஏனெனில், அதற்கு நிறைய முயற்சி எடுக்க வேண்டும். அதன்மூலம், உங்களின் மேலாளர் உங்களின் வேலையை மதிக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும்.” என்கிறார் அவர் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் நாட்களில் தன் சக பணியாளர்களுடன் போனில் பேசுவதை அவர் விரும்புகிறார். “அச்சமயங்களில் தனிமையாக இருக்கும், அதனால் தொடர்பில் இருப்பது நன்றாக இருக்கும்.”இந்த புதிய போக்கு, இந்த தலைமுறையினர் கடந்த தலைமுறையை போல் அல்லாமல் எல்லாவற்றுக்கும் எளிதில் வருத்தம் கொள்வதாக கூறப்படுவதற்கு மேலும் ஓர் உதாரணமாக இருப்பதாக சிலர் கூறுகின்றனர்.ஆனால், ஒன்றுக்கு தகவமைத்துக் கொள்வதில்தான் இது இருக்கிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் ஃபேக்ஸிலிருந்து மின்னஞ்சலுக்கு மாறினர். அதன்மூலம், தொடர்புகொள்வது இன்னும் எளிதானது.
இப்போது மெசேஜ் அனுப்புவதன் வலிமையை நாம் அங்கீகரித்து, 1990களில் எப்படி ஃபேக்ஸ் இயந்திரங்களை கைவிட்டோமோ, அதேபோன்று 2024-ல் நாம் போன் அழைப்புகளை கைவிட வேண்டிய நேரமிது..