தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கருப்பழகு கணவன்மார்களும் சிவப்பாக இருக்கும் அவர்களுடைய மனைவிகளும் கலந்து கொண்டிருக்கின்றனர். இன்றைய நவீன காலகட்டத்திலும் நிற பாகுபாடு மக்கள் மத்தியில் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது இந்த வார தமிழா தமிழா நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது. அதில் சிறப்பு விருந்தினராக சினேகன் மற்றும் நடிகை ரித்திகா கலந்து கொண்டிருக்கின்றனர். ரித்திகா தனக்கு சினிமா துறையில் நடந்த அவமானங்கள் குறித்து அதில் பேசியிருக்கிறார்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான விவாத நிகழ்ச்சி தமிழா தமிழா. தற்போது இந்த நிகழ்ச்சியை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார்.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான டாபிக்குடன் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் கருப்பழகு கணவன்கள் Vs சிவப்பழகு மனைவிகள் என்ற பெயரில் விவாதம் நடைபெற உள்ளது

அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரித்திகா பேசுகையில் நான் சினிமாவில் அறிமுகமான ஆரம்ப காலகட்டத்தில் நிறத்தால் எனக்கு பல திரைப்படங்கள் ரிஜெக்ட் ஆகி இருக்கிறது. நேரடியாகவே சிலர் நாங்கள் இந்த படத்திற்கு கலராக இருக்கிற பெண்ணை தேடுகிறோம் என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் படம் வெளியான பிறகு அந்த நடிகை ஏற்கனவே கலரா இருப்பாங்க ஆனால் அவங்களையும் கலர் கம்மியாக நடிக்க வைத்திருப்பார்கள். அப்போ நமக்கு மனசு வலிக்கும் என்று தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார். கலர் குறைவால் பலமுறை கட்டம் கட்டி வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

அதே போல கருப்பாக இருக்கும் ஆணும் சிவப்பாக இருக்கும் பெண்ணும் திருமண வாழ்க்கையில் இணைந்த பிறகு அல்லது இணைவதற்கு என்னவெல்லாம் கலர் எவ்வளவு பிரச்சனையாக இருந்துள்ளது என்பதை தான் இந்த நிகழ்ச்சியில் விவாதிக்க உள்ளனர். காதல் திருமணம் செய்து கொண்ட ஒரு ஜோடி நான் கருப்பாக இருப்பதால் என் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது அவங்க வீட்டில் என் முகத்தை கூட பார்க்க கூடாது.. குழந்தையா கருப்பா பிறக்கும்னு சொன்னாங்க என்று வேதனையை பகிர்ந்து உள்ளனர். குழந்தை பிறக்கும் போது சிவப்பாக இருப்பதாகவும் போக போக கருப்பாக மாறியதும் அதை பற்றி நேரடியாக எங்களிடம் கருத்து சொல்லி கஷ்டப்படுத்தி இருக்காங்க என்று வருத்தப்பட்டுள்ளனர்

அதே போல் மதம் மாறி திருமணம் செய்த இன்னொரு ஜோடி எங்க வீட்டில் கல்யாணத்திற்காக பேசும் போது மதத்தை தாண்டி கலர் ஒரு பிரச்சனையாக வந்து நின்றது என்று பேசியுள்ளனர். நிறத்தை வைத்து ஒதுக்கும் பிரச்சனை இன்னமும் இந்த சமூகத்தில் இருப்பது வருத்தமாக உள்ளது என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது என்பது இதன் மூலமாக தெரிய வந்துள்ளது. இந்த ப்ரோமோ வீடியோக்களை பார்த்த ரசிகர்களும் இது குறித்து அவர்களது கருத்துக்களை பதிவு செய்த வண்ணம் உள்ளனர்.