திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் நகராட்சி எதிர்ப்புறம் உள்ள மேம்பாலம் அருகில் தமிழக அரசையும், நெடுஞ்சாலைத் துறையையும் கண்டித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை ஜுன்-9ம் தேதி மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த மறியல் போராட்டத்தை தவிர்க்கும் வகையில் அரசு அலுவலர்கள் கள ஆய்வுக்கு வருமாறு மேற்படி கட்சியினருக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் அரசு தரப்பில் உடுமலைப்பேட்டை நகர காவல்துறை ஆய்வாளர் ஜீவானந்தம், உடுமலை நகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கட்சி சார்பில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் எம்.மூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், தமிழர் பண்பாட்டுப் பேரவை திருப்பூர் மாவட்ட தலைவர் பால் நாராயணன்,உடுமலை நகர செயலாளர் தெய்வக்குமார், திருப்பூர் மாவட்ட துணை செயலாளர் கா.அப்பாஸ், குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் மகேந்திரன், திமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் செந்தில்குமார், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் யூஎன்பி குமார் ஆகியோர் பங்கேற்று ஆய்வு செய்தனர். மேற்படி கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுப்பதாக அரசு அலுவலர்கள் உறுதி கூறினார்கள்.இதையடுத்து நாளை நடக்கவிருந்த மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.