மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் தமிழகத்தில் திமுக 39/39 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. அதன்படி, ஈரோடு மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் அதிமுக ஆற்றல் அசோக்குமாரை விட 2,36,566 வாக்குகள் அதிகம் பெற்று மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளார்.

அமைச்சர் சாமிநாதன், அமைச்சர் கயல்விழி செல்வராஜ், இல.பத்மநாபன்

ஈரோடு மக்களவை தொகுதிக்குட்பட்ட தாராபுரம் நகரப் பகுதிகளில் திமுகவிற்கு 19,408, அதிமுகவிற்கு 7,560, பாஜகவிற்கு 3,159 வாக்குகளும் பதிவாகியுள்ளது. நகரப்பகுதிகளில் அதிமுக, பாஜகவை விட திமுக 11,848 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் இவ்வளவு அதிக ஓட்டுகள் திமுக வாங்கியது/வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது இல்லை. இது ஒரு வரலாறு மட்டும் அல்ல புதிய சகாப்தம் என்கிறார்கள் நகர திமுகவினர்.

கோட்டை அப்பாஸ்

இதுகுறித்து நாம் விசாரித்த போது, தாராபுரம் திமுக நகர செயலாளராக சு.முருகானந்தம் பொறுப்பேற்ற பின்னர் மிகச்சிறப்பாக பணியாற்றி வருகின்றார். அனைத்து திமுகவினருடனும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றார். கழகம் அறிவிக்கும் கட்சிக் கூட்டங்கள், பிரச்சாரங்கள், போராட்டங்கள், மாநாடுகளுக்கு தனது திமுக தொண்டர் படையுடன் ெபரும் அணி திரள்வதால் நகரப் பகுதியில் திமுகவின் கரங்களுக்கு பலம் கூடுகிறது. நகர செயலாளர் இளைஞர் என்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது.

அமைச்சர் உதயநிதியுடன் நகர செயலாளர் முருகானந்தம்

மக்களவை தேர்தலின் போது கழக முன்னோடிகள், வட்டக் கழக செயலாளர்கள், இந்நாள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள், தொண்டர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து தேர்தல் பணியாற்றினார். மேலும், உள்ளாட்சி தேர்தலில் எப்படி வாக்காளர்களை வீடு வீடாக சென்று வாக்குச் சேகரித்தது போல, நகரப்பகுதிகளில் உள்ள அனைத்து வாக்காளர்களையும் சந்தித்து திமுகவின் நலத்திட்டங்களை எடுத்துக்கூறியும், துண்டறிக்கைகள் கொடுத்தும் ஓட்டு கேட்கப்பட்டது.

நகர திமுகவினர் வாக்குச்சேகரிப்பின் போது

தொண்டர்கள்-நிர்வாகிகளுக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டாலும் அதை அப்போதே பேசி சமாதானம் செய்து கட்சிப் பணியாற்றச் செய்வார். தேர்தல் பணிகளில் சுணக்கம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வார். அவரின் உழைப்பு வீண் போகவில்லை என்றனர்.

இதையடுத்து திமுக நகர செயலாளர் சு.முருகானந்தத்திடம் பேசினோம். சார்.. மாவட்ட அமைச்சர்களான அமைச்சர் சாமிநாதன், அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோர்களின் வழிகாட்டுதல்படியும், ஆலோசனைப்படியும் தேர்தல் பணியாற்றினோம். தாராபுரம் சட்டமன்ற பொறுப்பாளர் கோட்டை அப்பாஸ் அனைவரையும் அரவணைத்து மிகச்சிறப்பாக பணியாற்றினார். தோ்தல் களத்தில் ஹார்டு ஒர்க்கும் இணயத்தில் ஸ்மார்ட் ஒர்க்கும் செய்தோம்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஈரோடு மக்களவை உறுப்பினர் கே.இ.பிரகாஷ்

நகரப்பகுதியில் உள்ள இந்நாள், முன்னாள் நிர்வாகிகளும், தொண்டர்களும் இரவு பகல் பாராமல் அர்ப்பணிப்புடன் தேர்தல் பணியாற்றினர். அதேபோல, ஈரோடு மக்களவை தொகுதி வேட்பாளர் கே.இ.பிரகாஷ் நல்ல அணுகுமுறை உள்ளவர். நல்ல பேஸ் வேல்யூ உள்ள மனிதர். மிக முக்கியமாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியான தாராபுரம் நகரில் பிரச்சாரம் செய்து அரசின் சாதனைகளை விளக்கிக் கூறியதும், எங்கள் முதல்வர் ஸ்டாலினின் சத்தான நலத்திட்டங்களும், திமுக ஆட்சியின் மீது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையும் தான் இந்த மகத்தான வெற்றிக்கும், நகரப் பகுதிகளில் 11,848 என்ற பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவும் காரணமாக அமைந்தது என்றார்.

தாராபுரம் திமுக நகர செயலாளர் சு.முருகானந்தம் ஹார்டு ஒர்க்கோடு ஸ்மார்ட் ஓர்க் செய்து நகர திமுகவை அதிக ஸ்கோர் செய்ய வைத்துள்ளார் என்கின்றனர்!