நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 39 இடங்களைப் பிடித்து இமாலய வெற்றி பெற்றதற்கு உளவுத்துறை முக்கியமான ரோல் வகித்துள்ளது. திமுக போட்டியிடும் குறிப்பிட்ட தொகுதிகளில் உட்கட்சி பூசல் நீடித்து வருகிறது. தேர்தல் பணிகள் சுணக்கமடைந்துள்ளது. திமுக கூட்டணியான காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் திமுகவினர் சரியாக வேலை செய்வதில்லை. ஒத்துழைப்பு தருவதில்லை. இந்த நிலை நீடித்தால் 39/39 கனவு தகர்ந்து விடும். உறுதியாக வெற்றி பறிபோகும் என உளவுத்துறை அதிகாரிகள் முதல்வர் ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறார்கள்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட பொறுப்பு அமைச்சர்கள், நிர்வாகிகளை அழைத்து ஸ்டாலின் “டோஸ்” விட்டார். இண்டியா கூட்டணியின் மிக முக்கிய அங்கமாக நாம் இருக்கின்றோம். அற்ப கோஷ்டி பூசலுக்காக தொகுதியை பறிகொடுத்து விடாதீர்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என அனைத்து டேட்டாக்களும் உளவுத்துறை ரிப்போட்டாக என்னிடம் உள்ளது. உங்கள் ஒவ்வொருவரையும் நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றேன். நான் அப்பாவைப்போல இருக்க மாட்டேன். வெற்றி பறிபோனால் உங்களுடைய பதவிகளும் பறிபோகும் ஐாக்கிரதை என “லெப்ட் ரைட்” வாங்கி வார்ன் பண்ணியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இதன்பின்னர் தான் அனைத்து தொகுதிகளிலும் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் பணிகள் வேகமெடுத்தது. கரன்சிகள் கரைபுரண்டது. கூட்டணிக் கட்சியுடன் முழுதாக இணைந்து பணியாற்றத் தொடங்கினர். சுணக்கமடைந்த தேர்தல் பணிகள் சுறுசுறுப்பானது. கடந்த 04-ம் தேதி ரிசல்ட் வெளியான அன்றே முதல்வர் ஸ்டாலின் உளவுத்துறை மேல் அதிகாரிகளான செந்தில்வேலவன் ஐஜி, கார்த்திக் எஸ்பி, சரவணன் எஸ்பி ஆகியோரை நேரில் அழைத்து உரிய நேரத்தில் மிகச்சரியான தகவல்களை வழங்கியதற்காக வெகுவாக பாராட்டியுள்ளார். 39/39 வெல்லும் என நீங்கள் தான் உறுதியாக கூறினீர்கள். இது போலவே திறமையா செயல்படுங்க எனவும் உற்சகமாக முதல்வர் பேசியுள்ளதால் உளவுத்துறை அதிகாரிகள் படு குஷியில் உள்ளனராம்.