மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் யார் சாதனை செய்தாலும் சரி, எவருக்கு வேதனை என்றாலும் சரி முதல் ஆளாக வருபவர் தான் அதிமுகவைச் சேர்ந்த மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன்.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், கணக்கம்பாளையம் ஊராட்சி, எஸ்.வி.புரத்தை சேர்ந்த செல்வம் (எ) இராம.மனோகரன்
இலங்கையில் நடைபெற்ற மூத்தோர் சர்வதேச தடகளப் போட்டியில், இந்தியா சார்பில் கலந்துகொண்டு 800 மீட்டர் பிரிவில் தங்கம், 1500 மீட்டர் பிரிவில் தங்கம், மற்றும் 5000 மீட்டர் பிரிவில் வெள்ளி பதக்கங்களை வென்று நம் தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

அவரின் சாதனையைப் பாராட்டும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் சாதனையாளர் இராம.மனோகரனை நேரில் சென்று பாராட்டி பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.