திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மற்றும் கடலூர் மாவட்டம், சிதம்பரத்துக்கு அருகே வங்கக் கடலை ஒட்டிய பிச்சாவரம் பகுதிகளில் உள்ள அலையாத்திக்காடுகள் ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரப்பளவு கொண்ட அலையாத்தி காடாகும். 2004-ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி பேரலைக்கு பின்னர்தான், அலையாத்தி காடுகளைப் பற்றிய பொது மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. பித்தர்புரம் என்ற பெயரே பிச்சாவரம் என்று மருவியது
முத்துப்பேட்டை மற்றும் பிச்சாவரம்.
அலையாத்தி காடுகளில், சுரபுன்னை, வெண்கண்டல், கருங்கண்டல், ஆட்டுமுள்ளி, பண்டிக்குச்சி, நரிக்கண்டல், சிறுகண்டல், காகண்டல், தில்லை, திப்பாரத்தை, உமிரி என்ற மரங்களும், செடிகளும் காணப்படுகின்றன. ஒரு சில பகுதிகளில் மட்டுமே வளரக்கூடிய அரிய வகை மரங்களின் தொகுப்பே அலையாத்தி காடுகள். இவை அதிக வெப்பம் அல்லது அதிக மழை இருக்கும் இடங்களில் மட்டுமே வளரும்.
மேலும் கடலோர முகத்துவாரப் பகுதிகள், உப்பங்கழிகள், அலையாத்தி மரங்கள் வளர்வதற்கு ஏற்ற இடமாக ஆய்வுகள் சொல்கின்றன. அலையாத்தி காடுகளின் சிறப்புத் தன்மை, அங்குள்ள மரங்களின் சுவாச வேர்களாகும். இங்குள்ள மரங்களின் வேர்கள், நிலத்துக்கு அடியிலும், நிலத்திற்கு வெளியிலும் நிலைபெற்றிருக்கும். இந்த வேர்கள் மண்ணோடு பின்னிப் பிணைந்து காணப்படும்.
சுரபுன்னை உள்ளிட்ட சில வகை மரங்களின் தண்டுகளில் இருந்து உருவாகும் வேர்கள், மணல் சேற்றுக்குள் இறங்கி ஆழம் செல்லும். இவற்றுக்கு ‘தாங்கு வேர்கள்’ என்று பெயர். வெண்கண்டல் உள்ளிட்ட சில வகை மரங்களின் வேர்கள், ஈட்டி போல பூமிக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும். சதுப்பு நிலப் பகுதிகளில் ஆக்சிஜன் அளவு குறைவு. எனவே சுவாசிப்பதற்காக, வேர்கள் பூமிக்கு வெளியே தலை நீட்டுகின்றன. அந்த வேர்கள்தான், ஆக்சிஜனை உள்ளிழுத்து, மரங்கள் அனைத்தும் வாழ்வதற்கு உதவி புரிகின்றன.
அலையாத்தி காடுகள் உள்ள பகுதிதான், அரிய வகை விலங்குகள், பறவைகள், பூச்சிகள், மீன்கள் வாழ்வதற்கு அடிப்படை ஆதாரமாக விளங்குகின்றன. அலையாத்தி காடுகளில் உள்ள மரங்களின் வேர்கள், மணலை இறுகச் செய்து, கடல் சீற்றம் ஏற்படும் வேளையில் மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. 80 முதல் 150 மைல் வேகத்தில் வருகிற புயல் காற்றைக்கூட தடுத்து நிறுத்தும் வலிமை அலையாத்தி காடுகளுக்கு உண்டு. இந்த காடுகள் புயல் மற்றும் சூறாவளியிலிருந்தும், சுனாமியிலிருந்தும் கடலோர கிராமங்களை காக்கும் அரணாக இருக்கின்றன.
இந்த மாங்குரோவ் காடு சுரபுண்ணை மரங்களைக் கொண்ட காடுகள் மருத்துவ குணம் கொண்டவையாகும் ஒருபுறம் கடல். இன்னொரு புறம் பச்சைபசேல் என்று படர்ந்து காணப்படும் சுரபுன்னை மரங்கள் என இயற்கை எழில் மிகுந்த காணப்படும் ஆற்றுப் பகுதியில் படகுகளில் சென்று பார்த்தால் உற்சாகம் பொங்கும்.ஆற்றில் கால்வாய்களில் படகு சவாரி செய்தவாறே மூலிகை தாவரங்கள், வெளிநாட்டு பறவைகள், நீர் நாய் உள்ளிட்டவற்றை கண்டு ரசிக்கின்றனர்.
காடுகளுக்கிடையே செய்யும் பயணம் மனதை சொக்க வைக்கும். இயற்கை அழகு மெய்மறக்க வைக்கும். உள்ளேயிருக்கும் லகூன் பகுதியில் உள்ள சிறு, சிறு தீவுகளின் அழகு பிரமிக்க வைக்கும். பறவைகளின் கூச்சல் ரசிக்க வைக்கும்!
இப்படி கடற்கரையை ஒட்டியுள்ள உப்பனாறீறில் படகு வழிப்பயணமாக செல்வதும் ஒரு ஆனந்தம்தான் என்று சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், கல்லூரி, பள்ளி, மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறனர்..
திருச்சி மண்டல வன பாதுகாவலர்கள் மற்றும் விழுப்புரம் (பொறுப்பு) சதீஷ், விழுப்புரம் வனபாதுகாவலர் பெரியசாமி, ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் மாவட்டம் வன அலுவலர் குருசாமி மேற்பார்வையில் பிச்சாவரம் வனச்சரக அலுவலர் இக்பால் தலைமையிலான பணிகளைக் குறித்து இனிப் பார்ப்போம்.
காவேரி ஆற்றுப் படுகையின் வடக்கே வெள்ளாறு மற்றும் கொள்ளிடம் ஆற்றுக்கு நடுவே எல்லையாகவும், நன்னீர் மற்றும் ஒதநீர் கிடைக்கக்கூடிய இடமாக பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் அமைந்திருக்கும் அலையாத்திக் காடுகளே பிச்சாவரம் என்ற பெயருக்கே அழகூட்டு இடமாக இருந்து வருகிறது.
அதுபோல் பிச்சாவரம் வனசரகம் என்ற பெயரில் மட்டும் அல்லாமல் அலையாத்தி காடுகள் உருவாக்குதல், கண்டல் காடுகளை உருவாக்குதல் அக்காடுகளை அதிக அளவில் அழியாமல் பாதுகாத்தல் புதிய வகையான சதுப்புநில தாவரங்களை வளர்த்தல் இதுபோன்று செயல்களில் பிச்சாவரம் வனச்சரகம் ஈடுபட்டு வருகிறது.
தாவரவியல் அலையாத்தி காடுகளில் ஒன்றான தில்லை மரமானது சிதம்பரம் நடராஜா கோவிலில் ஸ்தல விருட்சமாக வழிபாடு செய்யப்பட்டு வரப்படுகிறது. இயற்கை பேரழிவான சுனாமி புயல் தடுப்பு அரணாக விளங்குகிறது. மழைக்காலங்களில் கடலில் மத்தியில் உருவாகும் புயல் கரையை அடையும் போது மணிக்கு 100 முதல் 150 கிலோமீட்டர் வேகத்தில் வீச்சு செய்யும் இவ்வாறு அதிக வேகத்துடன் புயல் காற்றினை தில்லைவனம் கலையிலேயே தடுத்து நிறுத்தி அதன் வேகத்தை குறைக்கிறது.
கடல் மண் அரிப்பைத் தடுக்கிறன
மீன் மற்றும் இறால் கடல் மீன்களின் உற்பத்தையையும் அதிகரிக்கச் செய்கிறன.புயல், வெள்ளம் இது போன்ற இயற்கை பேரழிவில் இருந்து பொதுமக்கள் மற்றும் இயற்கை உயிரினங்களையும் பாதுகாக்க பெருமளவு பயன்படுகிறது.
பிச்சாபுரம் சதுப்பு நிலத்தை ஒட்டி கிள்ளை பிச்சாவரம் டி.எஸ்.பேட்டை, கலைஞர் நகர், எம்ஜிஆர் நகர் ஆகிய குக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் பிச்சாவரம் சதுப்பு நில காட்டில் கிடைக்கும் பசுந்தீவனம் மற்றும் மீன் வளங்களைத் தங்கள் தேவைக்கும் பிழைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றன. இந்த கிராமங்களில் சுமார் 18000 மக்கள் வசித்து வருகின்றனர். இவற்றில் சுமார் 8,500 மீனவர்கள் ஆகும் இதில் 3000 மீனவர்கள் மட்டுமே சதுப்பு நில மீன் வளத்தைச் சார்ந்துள்ளனர்.
இதில் 3000 மீனவர்கள் இருளர் பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவர்கள். சுமார் 1700 மாடுகள் பிச்சாவரம் காட்டுப்பகுதியில் மழைக்காலங்களில் மேய்கிறன. அதிக அளவில் கால்நடை மேய்ச்சல்களினால் காடுகள் அழியும் தருவாய் இருந்தது.
அது மட்டுமில்லாமல் சூரிய வெப்பத்தினால் தாக்கப்படும் பொழுது மண்ணில் நீர் ஆவியாகி விடுகின்றது. இதனால் மண்ணின் பருவ அடர்த்தியில் மாற்றம் ஏற்பட்டு மரங்கள் வெட்டப்பட்டு சதுப்பு நிலப்பகுதிக்ழ்நோக்கி அழுங்கி பள்ளமாகி விடுகிறது.
இதை குறித்து அப்பகுதி மக்களிடம் மாங்குரோவ் காடுகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பின்னர், இதனால் கால்நடை மேச்சலைத் தடுக்க பிச்சாவரம் வனசரகம் அலையாத்தி காடுகள் இந்திரா நகர், தொப்பாளமரம், கிள்ளை சுற்று பகுதிகளில் கால்நடைகள் செல்லாதவாறு கம்பி வேலி அமைத்து புதிய டெக்னாலஜி முறையில் பொதுமக்கள் தங்கள் தேவைக்கு சென்று வர சவுக்கு மரக்கட்டைகள் படிக்கட்டுகள் அமைத்து வனத்துறையினர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
கடல் ஆமைகளை பாதுகாக்கும் பொருட்டு தகுந்த நடவடிக்கை எடுத்து ஆமை முட்டைகளை சேகரித்து அவற்றைத் தகுந்த முறையில் அடைகாத்து அதன் குஞ்சுகளை பாதுகாத்தும் பின்னர் கடலில் விடப்பட்டுள்ளது.
பிச்சா வாரத்தில் நடைபெறும் அனைத்து திட்ட பணிகளும் சதுப்பு நிலத்தை சார்ந்துள்ள மக்களை வைத்து செய்யப்படுகிறது இது இப்பகுதி மக்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பதுடன்.
பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகளை சார்ந்திருக்கும் மக்கள் மட்டும் பிற கடல் வாழ் உயிரினங்கள் அனைத்து கடைசி வரை சதுப்பு நிலை காட்டை பயன்படுத்திக் கொள்ளவும். பேரழிவுகளல் இருந்து பாதுகாக்கவும் பொதுமக்களை மாங்குரோவ் அலையாத்தி காடுகளின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வனத்துறையினர் வருகின்றன.
உலக கடல் தினத்தை முன்னிட்டு கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் வைத்து பிளாஸ்டிக் கழிவு சுத்தம் செய்தும் பிளாஸ்டிக்கின் தீமை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளித்தும்.மாங்குரோவ் கன்றுகள் நடப்பட்டு மாங்குரோவ் அவசியத்தை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
NABARD திட்டத்தில் சுமார் 17000 பல இனம் மரக்கன்றுகளை உருவாக்கி இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கி மரத்தின் தன்மைகளை எடுத்துக் கூறினர். பிச்சாவரத்தில் வரும் பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் சுற்றுலா பயணிகளுக்கு பிச்சாவரம் வனசரக அலுவலர் இக்பால் மாங்குரோவ் காடுகளை கண்டு களிக்கவும் மற்றும் மாங்குரோவ் காடுகளின் அழகை ரசிப்பதோடு அதை பாதுகாப்பதும் அவசியம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை தரும் போது பிளாஸ்டிக் பாட்டில் பாலிதீன் பைகள் எளிதில் தீபற்ற கூடிய பொருட்கள் மற்றும் அங்கு சென்று சமைத்து சாப்பிடுதல் ஆகியவை கூடாது
அலையாத்தி காடு முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறார்
-கே.தமிழகம் சேட்