தென்காசி பாராளுமன்ற தொகுதி தேமுதிக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் இன்று மார்ச்-03 தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சரவணன் மாவட்ட அவைத் தலைவர் முன்னிலை வகித்தார், ராமர் மாவட்ட பொருளாளர் வரவேற்புரை ஆற்றினார். செந்தில் குமார் நகர செயலாளர், அயூப்கான் தலைமை செயற்குழு உறுப்பினர், குருவையா தலைமை செயற்குழு உறுப்பினர், சிறப்புரை மாவட்ட கழக செயலாளர் சோலை கனகராஜ் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மாவட்ட துணைச் செயலாளர்கள் மாரிச்செல்வம், தங்கமாரி மங்கல செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் மைதீன், செந்தில்குமார், சங்கரய்யா கண்ணன், சண்முக கனி நகர செயலாளர், புளியங்குடி மாரியப்பன், செங்கோட்டை காதர் ஒலி, ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், மனோகராஜ் கண்ணன், மாரிமுத்து, சுப்புராஜ், லிங்குசாமி, வெங்கடேசன், குமார், பேரூர் கழக செயலாளர்கள் திருவேங்கடம், அருள் ஆய்க்குடி, முருகன் சாம்பவர், வடகரை முருகன், அச்சம் புதூர் உதுமான், வாசுதேவநல்லூர் நாகராஜ் மற்றும் வேலுச்சாமி, சந்தானம், கணேஷ்குமார், முருகன், சையது அலி, மாரித்துரை, வீமன் மற்றும் கிளைக் கழக செயலாளர்கள் பூத் முகவர்கள் கலந்து கொண்டார்கள். தொகுதி பொறுப்பாளர்களாக 1.சங்கரன்கோவில் A.அயூப்கான், 2.கடையநல்லூர் M.சரவணன், 3.வாசுதேவநல்லூர் C.குருவையா ஆகியோர்களை நியமனம் செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் இற்றப்பட்ட தீர்மானங்கள் : 1.கூட்டணி அமைக்கும் பட்சத்தில் தென்காசி தொகுதியை தேமுதிக போட்டியிடுவது. 2.மதுரை அல்லது விருதுநகரில் தம்பி விஜய பிரபாகர் அவர்களை போட்டியிட செய்ய வேண்டும். 3.ஒன்றிய நகர பேரூர் பகுதிகளில் சொந்தமாக இடம் வாங்கி கேப்டன் அவர்களுக்கு சிலை அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.