திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் தனியார் பள்ளியின் மூலம் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இங்கு ஜே.சி.பி. இயந்திரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக மண் அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது தனியார் பள்ளிக்குச் சொந்தமான 10-க்கும் மேற்பட்ட கடைகள் இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதில் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த இருவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அதோடு, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளது.
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பொக்லைன், ஜேசிபி, ஹிட்டாச்சி இயந்திரம், போர்வெல், கம்ப்ரசர் உள்ளிட்டவைகள் பயன்படுத்தக் கூடாது என கடந்த 2009-ம் ஆண்டு அப்போதைய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வள்ளலார் உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தனியார் பணிகளுக்கு ஜேசிபி உள்ளிட்ட மேற்கண்ட இயந்திரங்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறவேண்டும் என்பது விதிமுறை.
ஜேசிபி உரிமையாளர் தலைமறைவு ஜேசிபி இயந்திரத்தை மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. வருவாய்த்துறையினர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்பது வருவாய்த்துறையினருக்கு தான் வெளிச்சம். இது சம்மந்தமாக கோட்டாட்சியர், வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை இடமாற்றம் செய்ய வேண்டும். ஜேசிபி இயக்கும் உரிமையாளர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாகும்.
ஆனால் இந்த விதியை யாரும் கடைபிடிப்பதில்லை. இதனால் கொடைக்கானல் பகுதிகளான சின்னப்பள்ளம், செண்பகனூர், பிரகாசபுரம், அட்டக்கடி, வட்டக்கானல், வில்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை, பூம்பாறை, ஹைலாண்ட் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனியார் கட்டுமானம் பயன்பாட்டிற்கு பாறைகளை வெடி வைத்தும், கம்ப்ரசர் மூலம் உடைக்கும் பணி தினமும் நடைபெற்று வருகிறது. இதனால் நாளுக்கு நாள் ஜேசிபி இயந்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து நாம் ஏற்கெனவே தொடர்ச்சியாக செய்திகள் வெளியிட்டு மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கெண்டு சென்றோம். ஆனாலும் எவன் எக்கேடு கெட்டாலும் எங்களுக்கென்ன என்று நினைக்கும் அலுவலர்கள் இருக்கும் வரை இதே அவலநிலைதான் நீடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உள்ளாட்சித்துறை, வருவாய்துறை, கனிமவளத்துறை ஆகியோர்களின் அலட்சியத்தால் தான் இன்று இந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும். கட்டுமானப் பணிகள் முறையான அனுமதியோடும், விதிகளுக்குட்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறதா என உள்ளாட்சி நிர்வாகம் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். அதில் கட்டுமான பணியில் விதிமீறல் இருப்பின் அந்த கட்டுமானத்துக்கு உள்ளாட்சித்துறையினர் சீல் வைக்கவேண்டும். இந்த சம்பவத்தை தொடர்ந்து கொடைக்கானல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தனியார் கட்டுமான பணிகள் முறையாக சட்ட விதிகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்படுகிறதா, தடை செய்யப்பட்ட ஜேசிபி, ஹிட்டாச்சி போன்ற ராட்சத இயந்திர பயன்பாட்டை தடுக்கவும், பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு முறையாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறதா என மாவட்ட நிர்வாகத்தினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதில் உயிர் பலி ஏற்பட்டால் யார் பதில் சொல்வது? சொல்லுங்கள்?
இது தொடர்பாக நாம் வெளியிட்ட செய்திகள்
வருவாய்துறை ஆசியுடன் கொடைக்கானலில் அதிகரிக்கும் ராட்சத இயந்திரங்கள் பயன்பாடு..
வருவாய்துறை, கனிமவளத்துறை ஆசியோடு கொடைக்கானலை கூறுபோடும் கனரக இயந்திர குண்டர்கள்!