சேலத்தில் கடந்த ஜனவரி 21 ம் தேதி திமுகவின் மாநில இளைஞரணி 2வது மாநாடு நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம்
ஜோத்தம்பட்டி ஊராட்சி அரியநாச்சி பாளையம் கிராமத்தை சேர்ந்த நெசவுத்தொழிலாளரான ச.சதீஷ்குமார் (வயது 30) த.பெ. சக்திவேல் என்பவர் திமுக இளைஞரணியில் உள்ளார். இவரும் சேலம் திமுக இளைஞரணி மாநாடுக்கு சென்று திரும்பி வரும் வழியில் சேலத்தை அடுத்து சங்ககிரி டோல்கேட் அருகில் இரவு 11 மணி அளவில் உணவு சாப்பிடுவதற்காக சாலையை கடக்க முயன்றபோது கோவையிலிருந்து சேலம் நோக்கி வந்த அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டு அகால மரணம் அடைந்தார். இந்த சம்பவம் ஜோத்தம்பட்டி ஊராட்சி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

அமைச்சர் உதயநிதியின் X பதிவு

மறைந்த ச.சதீஷ்குமாருக்கு விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது X வலைப்பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.