திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், கடத்தூர் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கத்தில் கையாடல் நடைபெற்றுள்ளது எனவும் கையாடல் தொடர்பான முழுமையான செய்திகள் விரைவில் வெளியிடப்படும் என கடந்த ஜன 13 இல் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
அதன்படி, கடத்தூர் கடன் கூட்டுறவு சங்கத்தில் பல விவசாயிகளிடம் கடன்தொகையினை
திரும்ப பெற்றுக்கொண்டு உரிய ரசீது வழங்கவில்லை. விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தில் கடன்பெற்று அதை முறையாக செலுத்தியும் கல்வியறிவற்ற காரணத்தினால் அதை சாக்காக வைத்து ஏமாற்றுகிறார் என்கின்றனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளருக்கு புகார் அனுப்பினர்.
இதையடுத்து, இணை பதிவாளர் விசாரணை மேற்கொண்டதில் விவசாயிகள் செலுத்திய சுமார் 13 லட்சம் ரூபாய்க்கு கணக்குகள் இல்லையாம்? இந்த பணம் எங்கு போனது? கையாடல் செய்துள்ளவர்களிடம் குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தை திரும்ப செலுத்தும்படி எழுதி வாங்கப்பட்டுள்ளதாம்? அதோடு, புதிதாக ஒரு பொறுப்பு செயலரை நியமித்து பொங்கல் சிறப்பு தொகுப்புகள் வழங்கும் பணி நடைபெற்றுது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சீனிவாசன் துரித நடவடிக்கை மேற்கொண்டு, முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வகையிலும், கடத்தூர் கூட்டுறவு சங்கத்தில் கடன்பெற்ற அனைத்து விவசாயிகளையும் அழைத்து இதுபோல யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதையும் கண்டறிய வேண்டும்.
காட்டிலும், மேட்டிலும் வியர்வை சிந்தி உழைத்துப் பிழைக்கும் விவசாயிகளின் பணத்தை சூறையாடும் இதுபோன்ற களவாணிகளை பூண்டோடு ஒழிக்க வேண்டும்.