திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஜாமிஆ சுப்ஹானிய்யா மதரஸா மற்றும் கல்வி அறக்கட்டளையின் 2 ஆம் ஆண்டு ஐம்பெரும் விழா கடந்த 07.01.2023 ம் தேதியன்று நடைபெற்றது. இந்த ஐம்பெரும் விழாவில் பெண்கள் விழிப்புணர்வு பட்டிமன்றம், உத்தம நபியின் உதய தின விழா, சமய நல்லிணக்க மாநாடு மற்றும் மதரஸா மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் சிறப்பாக நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு அரசு கரூர் மாவட்டம் காஜி சிராஜ்தீன் ரஸாதி, தமிழ்நாடு அரசு திருப்பூர் மாவட்ட காஜி முஹம்மது தாஜிர் முன்னிலை வகித்தனர். நிறுவனர் முஹம்மது ஷேக் பரீத் உலவி, ஆசிரியர் ஜியாவுதீன், தொகுப்பாளர் கலீலுர் ரஹ்மான் தாவூதி ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.இவ்விழாவில், உலக மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ பிரார்த்தனை செய்யப்பட்டது. மேலும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில், திருப்பூர் தெற்கு திமுக மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், தாராபுரம் திமுக நகர கழக செயலாளர் முருகானந்தம், தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன், தாராபுரம் திமுக நகர கழக துணைச் செயலாளர் கமலக்கண்ணன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட துணைத் தலைவர் சின்னத்துரை பழனிசாமி, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் முருகானந்தன், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி தலைவர் பி.மணிவாசகம், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நகரத் துணைத் தலைவர் நூருல் ஹசன் மற்றும் அனைத்து கட்சியினரும், திருப்பூர் மாவட்ட உலமாக்களும், தாராபுரம் வட்டார உலமாக்களும், பொது மக்களுக்கும் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர். வருகை புரிந்த அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.