‘லவ் இன்சூரன்ஸ் கார்பரேஷன்’ படத்திற்கு LIC என்ற தலைப்பை பயன்படுத்துவதை நிறுத்தக் கோரி 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. LIC என்பது எங்கள் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட வணிக குறியீடு. ஆகவே அதை தவறாக பயன்படுத்துவது சட்டப்படி குற்றம்” என நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
ஏழு நாட்களுக்குள் படத்தின் பெயரை மாற்றாவிட்டால் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நோட்டீசில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.