திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு புத்தாண்டு விடுமுறையை கொண்டாட தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ள வட்டக்கானல் பகுதிக்கு ஆந்திரா மாநிலம் ஹிந்துப்பூர் பகுதியில் இருந்து 9 நபர்கள் புத்தாண்டை கொண்டாட கடந்த 31ஆம் தேதி வந்துள்ளனர். இவர்கள் வட்டக்கானல் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் தங்கியுள்ளனர்.
மேலும் இந்த நண்பர்கள் குழு புத்தாண்டு பிறந்ததையடுத்து மது அருந்தியதாக சொல்லப்படுகிறது. இதில் தனியார் கம்பெனியில் பணிபுரியும் நரேந்திரா (25) என்ற இளைஞர் அதிகமாக மது இருந்தியதாகவும், சிக்கன் அதிகமாக உட்கொண்டதாகவும் உடன் வந்த நண்பர்களால் கூறப்படுகிறது?
இதனையடுத்து நேற்று வாந்தி எடுத்ததாகவும் மயங்கிய நிலையில் இருந்த இளைஞர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது, இதனை தொடர்ந்து தகவல் அறிந்த காவல் துறையினர் உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் காவல் துறையினர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து வைத்துள்ளனர். இது குறித்து காவல் துறையினர் உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் விசாரணையும் செய்யும் போது இளைஞருக்கு ஆஸ்துமா இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. புத்தாண்டு விடுமுறை கொண்டாட வந்த இளைஞர், புத்தாண்டில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.