கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று (டிச28) அன்று சூலூர் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் பிரகாஷ் (32) என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்துள்ளனர். மேற்படி கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொண்டனர்.
தனிப்படை காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு 24 மணி நேரத்திற்குள் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்தனர். மேற்படி கொலை வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயண இ.கா.ப., பாராட்டு தெரிவித்தார். அதோடு, பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.