கோவை வனக்கோட்டம், காரமடை வனச்சரகத்தில் உள்ள வெள்ளியங்காடு, ஆதிமாதியனூர், தோலாம்பாளையம் சுற்று வட்டாரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து தென்னை, வாழை மற்றும் பாக்கு மரங்களையும், பயிர்களையும்  சேதப்படுத்தியது.

வனத்தை விட்டு வனவிலங்குள் வெளியேறுவதை வனத்துறையினர் தடுக்க தவறி விட்டதோடு யானைகள் விவசாய நிலங்களுக்குள் நுழையும் போது வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தால் அவற்றை விரட்ட நடவடிக்கை ஏதும் எடுக்காமல் மெத்தன போக்குடன்  நடந்து கொள்வதாக புகார் எழுந்தது. 

வனவிலங்குகளால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுடன் விவசாயிகள், பொதுமக்கள் காரமடை வனச்சரக அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வனத்துறையினரை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

இதையடுத்து, காவல்துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடித்து வைத்தனர். இதுகுறித்து, மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் கோவை மாவட்ட ஆட்சியர் 

ஏ.கே.செல்வராஜ் எம்எல்ஏ மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் ஆகியோர் பயிர்சேதங்களை பார்வையிட்டனர்

கிரேந்தி குமாரிடம் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், வனவிலங்குகளால் விவசாய பயிர்கள் சேதம் ஏற்படுத்தாமல் இருக்க போதிய  நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

இப்பகுதிகளில் வனவிலங்குகளால் சேதமான விவசாய பயிர்கள் மற்றும் மரங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து ஆட்சியர் கிராந்தி குமார் கூறியதாவது; விவசாய நிலங்களில் வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்தாமல் இருக்கவும், அவற்றின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையிலும் வனவர், வனக்காப்பாளர் மற்றும் யானை விரட்டும் காவலர்கள் அடங்கிய ஐந்து குழுக்கள் நியமிக்கப்பட்டு இரவு காவல் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டனர்

தேவையான இடங்களில் அகழிகள், வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை  வழங்கப்படும் என்று கூறினார்.

இந்த ஆய்வின்போது மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், கோவை மாவட்ட வன அலுவலர்  ஜெயராஜ், காரமடை ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை மகேந்திரன், சிக்காரம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர்  ஞானசேகரன், ஊராட்சி மன்ற துணை தலைவர் ரவிச்சந்திரன், வனச்சரக வனவர்கள் பிரபு, சிவனையன், சண்முகசுந்தரம் மற்றும் விவசாயிகள், ஊர் பொது மக்கள் உடன் இருந்தனர்.

-கே.தமிழகம் சேட்.