திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், எலையமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பார்த்தசாரதிபுரம் 3, 4 வார்டுகளில் பெரும்பான்மையாக காட்டு நாயக்கர் சமூகத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மலைவாழ் மக்கள் பிரிவில் உள்ளனர்.

எலையமுத்தூர் ஊராட்சிக்கு எஸ்டி பிரிவினருக்கு 35 வீடுகள் கட்ட அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, எலையமுத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் ஈ.கே.மாரிமுத்து மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி, பொறியாளர் சுப்பிரமணி, மேற்பார்வையாளர் நாகராஜ் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஃபரீதுர் ரகுமான் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் குழு  இன்று பார்த்தசாரதிபுரம் 3,4 வார்டுகளில் கணக்கெடுப்பு நடத்தி தகுதியானவர்களிடமிருந்து நேரடியாக விண்ணப்பம் பெற்று உடனடியாக ஆன்லைன் வாயிலாக பதிவேற்றம் செய்தனர்.

அதோடு, ஊராட்சிமன்றத் தலைவர் ஈ.கே.மாரிமுத்து சொந்த இடம் இல்லாத ஏழை மக்களுக்கு இலவச பட்டா பெற்றுத்தர கணக்கெடுப்பு நடத்தி தகுதியானவர்களிடம் விண்ணப்பம் பெற்றார்.