திருப்பூர் மாவட்டம் – உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பி.ஏ.பி., தொகுப்பு அணையிலிருந்து காண்டூர் கால்வாய் மூலம், திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் பெறப்படுகிறது.

சேதமடைந்த பகுதி

இந்நிலையில், காண்டூர் கால்வாயின் 37.5வது கிலோ மீட்டரில், வாய்க்கால் கரையில் கசிவு ஏற்பட்டது. அதிக அழுத்தத்தில் தண்ணீர் வெளியேறியதால், வாய்க்கால் கரையில் பெரிய உடைப்பு ஏற்பட்டது. உடைப்பு சீரமைக்கும் பணிகள் தரமாகவும், விரைவாகவும் நடைபெறுகிறதா என்று மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் ஆய்வு செய்தார். அதோடு, காண்டூர் கால்வாய் அருகே உள்ள கோமாளியூத்து பள்ளம், வரப்பள்ளம்,  வெட்டு பள்ளம் ஆகிய நீரோடைகளிலிருந்து மழைக்காலங்களில் வரும் உபரி நீர் செல்லும் குறுகலான Super Passages பகுதிகளை அகலபடுத்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அப்பகுதி விவசாயிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.