திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பி.சாமிநாதன் ஐபிஎஸ் மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக திருப்பூர் மாநகர துணை ஆணையரான அபிஷேக் குப்தா ஐபிஎஸ் புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை உள்துறை செயலளர் பெ.அமுதா ஐஏஎஸ் இன்று வெளியிட்டுள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பல்லடம் பகுதியில் நியூஸ் 7 செய்தியாளர் நேசபிரபு வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாகத்தான் தற்போதைய எஸ்பி மாற்றப்பட்டார் என்றும், மாநிலம் முழுக்க 11 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் அந்த அடிப்படையில் தான் தற்போதைய எஸ்பி மாற்றம் செய்யப்பட்டுள்ளார் இது வழக்கமான மாறுதல் தான் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
புதிய எஸ்பியாக பொறுப்பேற்கும் அபிஷேக் குப்தா ஐபிஎஸ் பி.காம். எல்.எல்.பி. பட்டப்படிப்பு படித்தவர். இவர், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். 2019-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வானார். தூத்துக்குடி, விழுப்புரம் மாவட்டங்களில் உதவி போலீஸ் சூப்பிரண்டாகவும் பின்னர் பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாநகர துணை கமிஷனராகவும் பணியாற்றிள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.